பெங்களுரு...

Monday, October 09, 2006


Posted by Picasa

இன்னும் இருக்கிறது ஆகாயம்

மழை
பாதையோர படுக்கையறையில் பச்சிளம் குழந்தையுடன்
குளிரில் குடியிருக்கும் குடும்பம்

சூறாவளி
சுற்றி வீசும் காற்று
சுழண்டு வீழும் உயிர்கள்
சுழற்றியடிக்கும் கட்டிடங்களையும்
சுனாமிமாண்டவர்களும் மீண்டவர்களும்
மீண்டும் வாழ மறுபடியும் மீண்ட உயிர்கள்

குண்டு வெடிப்பு போரபாயம்
குமுறும் பெருநெருப்பு பூகம்பம்
வீழ்ந்தாலும் வாழ வைக்கும் உயிர் நம்பிக்கை

வாழும் வேட்கையில்

வீம்பாய் தலை தூக்கும் புல் பூண்டு
விழாது அசையும் நாணல்
நிலம் வாரா சாதகப்புள்
நிஜம் இவையே

இன்னும் இன்னும் வல்லது வாழ்வதற்காய்
புத்தம் புது புனர்ஜென்மமேக
இன்னும் இருக்கிறது ஆகாயம்



முன்பும் இருந்தது ஆகாயம்

இன்னும் இருக்கிறது ஆகாயம்

இனியும் இருக்கும் ஆகாயம்

கண் வழியே.....

Sunday, May 14, 2006

Posted by Picasa

வா காதலிக்கக் கற்றுத் தருகிறேன்

Tuesday, March 21, 2006

வா,
அந்தப் புல்லின்
தவம் கலையா வண்ணம்
மெதுவாக வந்து
அருகில் அமர்!

எதுவும் பேசாதே!
சின்ன முணுமுணுப்புக் கூட
வேண்டாம்!
மெளனம் தாய்மொழியாக்கு!
அலையென துள்ளிவரும்
எண்ண அலைகளைஅள்ளி
தூரப் போடு!

வா,
கொஞ்சம் நெருங்கி வா
மூச்சோடு மூச்சு முட்டி
இருவர் இருதயமும்
தகிக்கும் வரை
நெருங்கி வா!

உன் பெயர் மற!
என் பெயர் மறக்கடி!

மெலிதாய் சிரி!

நீ ஆண்
நான் பெண்
என்பது
துடைத்துப் போடு!

எக்காலம்
இக்காலம்
கேள்வி தொலை!

பார்
பார்
பார்த்துக் கொண்டே
இரு!

உன் இரு விழியில்
உயிர் கசிந்து ஒழுகி
என்னுயிரில் கலந்து
போகும் வரை
பார்த்துக் கொண்டே
இரு!

பசிக்காவிட்டாலும்
கண்களால்
கண்கள் பார்த்து
என் உயிர் புசி!
உன்னை
புசிக்க எனக்கு
கற்றுக் கொடு!

பொறு,
நீயும் நானும்
தின்றுத் தின்று
தீரும் கணம்
மரித்து
சொர்க்கம் போவோம்!

அங்கேயும்,
இப்படியே
காதல் தொடர்வோம்!



- ப்ரியன்.

அன்புடன்
அருனாசலம்

உலகத்தின் ஓரம் நின்று, அத்தனையும் பார்த்திருப்போம்!

ஒரு நாளில் வாழ்க்கை
இங்கே எங்கும் ஓடிப் போகாது!
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது!
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்?
அத்தனை கண்ட பின்னும் பூமி
இன்னும் பூ பூக்கும்!
ஓ!கருவாசல் விட்டு வந்த நாள் தொட்டு,
ஓ!ஒரு வாசல் தேடியே விளையாட்டு,
ஓ!கண் திறந்து பார்த்தால் பல கூத்து,
ஓ!கண் மூடிக் கொண்டால்....
! ஓஹோஹோ!

போர்க்களத்தில் பிறந்து விட்டோம்,
வந்தவை போனவை வருத்தமில்லை!
காட்டினிலே வாழ்கின்றோம்,
முட்களில் வலியுண்டு மரணமில்லை!
இருட்டினிலே நீ நடக்கையிலே,
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்!
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே,
உனக்குத் துணை என்று விளங்கிவிடும்!
தீயோடு போகும் வரையில்...
தீராது இந்தத் தனிமை!
கரை வரும் நேரம் பார்த்து,
கப்பலில் காத்திருப்போம்!
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர்த்தொடுப்போம்!
ஓ!அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே,
ஓ!இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே,
ஓ!மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே,
ஓ!அந்தக் கடவுளைக் கண்டால்...
! ஓஹோஹோ!

அது எனக்கு, இது உனக்கு,
இதயங்கள் போடும் தனிக்கணக்கு!
அவள் எனக்கு, இவள் உனக்கு,
உடல்களும் போடும் புதிர்க் கணக்கு!
உனக்குமில்லை, இது எனக்குமில்லை,
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்!
நல்லவன்தான், அட கெட்டவன்தான்,
கடைசியில் அவனே முடிவு செய்வான்!
பழி போடும் உலகம் இங்கே!
பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று,
அத்தனையும் பார்த்திருப்போம்!
நடப்பவை நாடகம் என்று
நாமும் சேர்ந்து நடித்திருப்போம்!
ஓ!பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக் கொள்வோம்,
ஓ!பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓ!கதை முடியும்போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஓ!மறு பிறவி வேண்டுமா?

ஒரு முறை கேள்

Monday, March 20, 2006

என் வீரமும் சபதமும்
எல்லா சப்தமும்
அடங்கி போனது
உன் முன்னே மட்டும்தான்
உன் கடைக்கண் வேலும்
புருவத்தின் வாழுமேஅதற்கு சாட்சி!

ஒரே ஒரு முறை மட்டும்
என்க்காய் காது கொடு
உன் மென்மையான கண்களை மூடு
உன் மூச்சுக்காற்றை மெதுவாய் விடு
இப்போது கேட்கிறதா?
என் இதயம் எப்போதும் உன்னக்காய்
உனக்காய் மட்டும் துடிப்பது?
உன் அதரங்கள் புன்னகைக்கின்றனவே?
அது போதும்!

If you still wanna go, I'll keep my mouth shut.
Arunachaalm

ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே...

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!

எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!