ஈழம் - மழை வர வேண்டும்

Friday, May 22, 2009

என்னுடைய பள்ளி ப்ராயத்தில் ஈழம், விடுதலை புலிகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இலங்கை அகதி மாணவர்கள் சிலருடன் பழகியும் இருக்கிறேன். தமிழக மக்கள் மிகுந்த பெருமையுடன் புலிகளை பார்த்த காலம் அது. அந்த மக்களும் ஈழம் மலரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். என் அப்பாவும் இலங்கை போர் செய்திகள் மிக உன்னிப்பாக கவனிப்பார். புலிகளின் சிறு வெற்றியும் தமிழகத்தில் கொண்டாடப்ட்டதாக நினைவு. சட்டென காட்சி மாறியதை ஒரு கோடை கால பள்ளி விடுமுறையில் உனர முடிந்தது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது அனைத்தையும் மாற்றியது.

எனக்கு தெரிந்து அவர் தான் இந்தியாவின் கடைசி தேசிய தலைவர். அவருக்கு பிறகு யாவரும் மாநில/பிராந்திய தலைவர்கள் தாம். அந்த கொலை ஏற்ப்படுத்திய அலைகள் அதுவரை விடுதலைப்புலிகளை பற்றி அதிகம் அறியாத வட இந்திய மக்களை வெறுப்படைய வைத்தது. அந்த வெறுப்பு இன்று வரை குறையவே இல்லை. புலிகள் அமைப்பு தடை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஈழ செய்திகள் இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படவில்லை. அதிகம் கவனிக்கப்படததால் வனிக நோக்கம் கொண்ட் இந்திய மீடியா நாளடைவில் ஈழத்தை மறந்து போயின. நாங்கள் எல்லோரும் வளர்ந்தோம். எங்களுக்கு விடுதலை புலிகளை பற்றி அதிகம் தெரியாது. ஈழ தமிழர்கள் பற்றி அதிகம் தெரியாது. தெரிந்த வரை தன் சகோதர இயக்கங்களை அழித்து தன்னை தவிர வேறு எவரும் ஈழ தமிழினத்தை பிரதிநித்துவ முடியாமல் வலுப்பெற்ற ஒரு அமைப்பு. நார்வே சில காலம் அமைதி வேண்டி தூது போனது. ரனில் விக்கிரமசிங்கே சற்று மித வாதியாக தெரிந்தார். தனி ஈழம் தவிர வேறு எதையும் தீர்மானமாக நிராகரித்தனர். தமிழக மக்கள் மெல்ல மெல்ல ம்றந்து வாழ ஆரம்பித்தனர். நாள்டைவில் அது வெறும் இலங்கை பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ரனில், ராஜிவ் ஆகியோரின் தீர்வுகளை பரிசோதனை முயற்சிய்லாவது யோசித்தார்களா என் தெரியவில்லை. இவ்வள்வு தான் எனக்கு இடைப்பட்ட நாட்களில் தெரியும். 18 ஆண்டுகளுக்கு பிறகு கட்ந்த சனவரி மாதம் தான் மீண்டும் தெரியும். தமிழக வெகுஜன பத்திரிக்கைகள்/தொலைக்காட்சிகள் அது வரை கண்டுகொள்ளவில்லை.

சனவரிக்கு பின் ஈழம் பற்றி அதிகம் படிக்க ஆரம்பித்தேன். அந்த மக்கள் மீது உன்மையான அக்கறை/கவலை எற்ப்ப்ட்டது. எதாவது செய்ய விரும்பினேன். தமிழக தலைவர்கள் குழப்பி அடித்தனர். அனைவரும் ஓட்டுக்கு நடிப்பதாக பட்டது. அரசியல் சாராத சீமானின் பேச்சு என்னை கவரவில்லை. அனைத்திற்கும் சோனியாவை காரணம் சொன்னது சற்று அபத்தமாகவே பட்டது. என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால் தேசிய குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரை (பிரபாகரன்) இந்தியா ஆதரித்து பேசும்/தலைவராக ஒப்புக்கொள்ளும் என்று இவர்கள் எப்படி நம்புகிறார்கள் என்று மட்டும் புரியவில்லை. கவிஞ்ர் தாமரை சொன்னது போல இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது. தமிழனாக இருந்தால் இந்தியனாக இருக்க முடியாது. தயவு செய்து, தமிழக தமிழர்களை குறை சொல்லதீர்கள். அவர்களில் பெரும்பாண்மையினர்க்கு விசயம் போய் சேரவேயில்லை அல்லது அதன் வீரியத்தை உனர சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பது என் கருத்து.

பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக வந்த செய்தி உலுக்கியது. இருந்த ஒரே நம்பிக்கையும் பொய்த்துப் போனது. ஈழ தமிழ்ர்க்களின் அலங்கோல போர் காட்சிகள் கண்களை விட்டு அகல மறுத்தன. மணம் உள்ளுக்குள் வெம்மியது. துயர காட்சிகள். கொல்லப்பட்டவர்களின் என்னிக்கை கூட ஆயிரங்களில் தான் வ்ந்தன. உள்நாட்டு அகதிகளாக பதிவு செய்வதற்க்கும் சில சோதனைகளுக்காகவும் இலட்ச கணக்கான மக்கள் வரிசையில் நிற்கின்றனர். அவர்கள் எவ்வாறு தூங்குவார்கள்? உடுக்க, குளிக்க, புசிக்க என்ன செய்வார்கள்? மரண நோய்கள் பரவுமே? ஏல்லாவற்றிக்கும் மேலாக குண்டடி காயங்களுட்ன் அல்லவா இருக்கிறார்கள். மணம் நிலை கொள்ள மறுத்தது. எதுவுமே செய்யமுடியாத இயலாமை வேறு.

இலங்கையில் கொழும்பு கொண்டாட்ட காட்சிகளில் காண்கையில் என்ன மனிதர்கள் இவர்கள் என்றாகி போனது. சக மனிதர்களின் மரணம் எப்படி கொண்டாட்டாத்திற்கு உரியது? இவர்களுடன் எப்படி இனைந்து வாழ முடியும்? சிங்களவர்களில் மணிதர்களுக்கு பஞ்சமா? அப்போது உடனே தோண்றியது தனி ஈழத்தில் மட்டுமே சற்று நிம்மதியக வாழ முடியும். ஆனால் பிரபாகரனை தாண்டி இரண்டாம் கட்ட தலைவர்கள் வேண்டும். பிரபாகரன் வீழ்ந்தால் ஈழமே அழிந்தாகவும், கணவு கலைந்தது போலவும் பார்க்கப்படுகிறது. பா.ராகவன் போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் கூட இப்படி தான் பார்க்கிறார்கள்.இந்த போக்கு மிகவும் தவறு/அபாயம் கூட.

காலையில் நான் வழக்கமாக பத்திரிக்கை வாங்கும் கடையில், கடைக்காரர் சொன்னார், ”விசயம் கேள்வி பட்டதிலேருந்து மனசே சரியில்ல. ஆனா நக்கீரன்ல நியுஸ் பாத்துட்டு ஒரே சந்தோசமா இருக்கு. தலைவர் உயிரோட தான் இருக்கார். இனி கவலையில்லை. அவர ஒரு பயலாலையும் புடிக்க முடியாது”. முகம்/அகம் நிறைய மகிழ்ச்சியுடன் தான் அதை அவர் சொன்னார். குறைந்த பட்சம் என்னை பொறுத்த வரை, ஈழத்தை நம்பும் பெரும்பாண்மையான மக்களின் கருத்தும் இதுவாக தான் இருக்கும். பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என என் உள்மணம் நம்புகிறது. அவர் தனக்கு பிறகு ஈழத்தை முன்னெடுத்து செல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும். அப்போழுது தான் புலிகள் சொல்வது போல ”மீண்டும் மேகங்கள் கூடும். மழை வரும். ஈழம் நனவாகும்.

0 comments: