Saturday, May 16, 2009
தேர்தல் 2009 முடிந்து முடிவுகள் கிட்டத்தட்ட வெளிவந்துவிட்டன. காங்கிரஸ் ஆட்சி அமைக்க போகிறது.
தமிழகம்
- தமிழக மக்களை ஈழ பிரச்சனை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.இலங்கை பிரச்சனையை இந்திய தேசிய தேர்தலுடன் ஒருங்க்கினைத்து பார்க்க விரும்பவில்லை.
- விலைவாசி உயர்விற்க்கும் அரசாளும் கட்சிக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.
- ஆளும் கட்சிக்கு எதிராக அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை
- பா.ம.க வின் இடத்தை விஜயகாந்தின் தே.மு.தி.க எடுத்துக் கொண்டது. இனி வரும் தேர்தல்கலில் இந்த கட்சியை கழகங்கள் கவனிக்கலாம்.
- பா.ம.க் வின் சந்தர்ப்பவாத நிலையயும், ஜாதி சார்பையும் மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
- சரத் குமார், கார்திக் யாரும் தலைவர்கள் இல்லை(குறைந்த பட்சம் அடுத்த தேர்தல் கூட்டணிக்கு கூட் :))
- ராகுல் காந்தியின் வருகை இந்திய தேசிய காங்கிரஸுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்று தந்துள்ளது.
- மந்தமான பொருளாதார நிலையை சமளிக்க மன்மோகன் சிங் அரசு தொடர வெண்டும்.
- தமிழகத்தை போலவே ஆளும் கட்சிக்கு எதிராக அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை.
- அணு சக்தி ஒப்பந்ததை யாரும் எதிர்க்கவில்லை. மாறாக நாட்டின் மிக அத்தியாவசிய தேவையாக பார்க்கப்பட்டு இருக்கிறது.
- ராம் விலாஸ் பாஸ்வான், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங், மாயாவதி, அமர் சிங் வகையராக்களை மக்கள் பெரிய அளவில் இந்த முறை அங்கிகரிக்கவில்லை.
- நாட்டின் சிக்கலான நிலையில் ஆட்சி மாற்றத்தை யாரும் விரும்பவில்லை.
முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கும் போது, அத்வானி பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். பதிலுக்கு பிரதமர் நன்றி தெரிவித்து பாஜ காவின் ஒத்துழைப்பை கோருகிறார். இந்த பன்பான அரசியல் போக்கை தமிழகத்தில் இனி கானவே முடியாதா?
4 comments:
முதல்வரின் உண்ணாவிருத நாடகம் நண்றாக எடுபட்டுள்ளது.
முதல்வரின் உண்ணாவிருததிற்க்கு பிறகு சன் தொலைகாட்சியில் ஈழ செய்திகள் இருட்டடிப்பு செய்யபட்டதும் ஒரு காரணம்.
அணுசக்தி ஒப்பந்தம் மக்களால் அடிப்படைத்தேவையாக பார்க்கப்படுகிறது என்பது உண்மையல்ல, உண்மையில் இந்த ஒப்பந்தம் குறித்து பெரும்பான்மையான மக்களுக்கு ஏதும் தெரியாது.
வினவு
ஓரளவு ஒத்துக்கொள்கிறேன். ஆணால் மின்சார பற்றாகுறை பற்றி அனைவருக்கும் தெரியும் என நம்புகிறேன். மின்சாரம் தயாரிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கும் எதிர் கட்சிகள் தடுக்கின்றன என பார்க்கப்பட்டு இருக்கலாம்.
சன் தொலைக்காட்சி மட்டும் இல்லையே! ஈழ பிரச்சனை முக்கிய காரணி என்றால், வைகோ, பா.ம.க தோற்க்க வேண்டிய அவசியம் இல்லை.
சீமான், பாரதிரஜா ஆகியோர் முடிந்த அளவு அந்த பிரச்சனைய மக்களிட்ம் கொண்டு சென்றனர்.
Post a Comment